குன்னூர் மலை பாதையில் 18. கி.மீ., தூரம் தவக்கால பரிகார பவனி
குன்னூர்; பர்லியார் முதல் குன்னூர் வரை மலை பாதையில் 18 கி.மீ., தூரம் தவக்கால பவனியில் ஈடுபட்ட பங்கு மக்கள் ஏசுவின் பாடுகளை தத்ரூபமாக விளக்கி வந்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் புனித செபஸ்தியார், கேட்டில் பவுண்ட் புனித தோமையார், பர்லியார் அன்னை வேளாங்கண்ணி தேவாலயங்களின் குழுவினர் ஒருங்கிணைந்து, நேற்று பர்லியார் முதல் குன்னூர் வரை மலை பாதையில், 18 கி.மீ., தூரம் சிலுவையை சுமந்தபடி தவக்கால பவனியை நடத்தினர். இதில், சிலுவையை ஏந்திய ஏசுவை அடித்து துன்புறுத்துவது உள்ளிட்ட பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில் ஏசு, கன்னி மரியாள், பிலாத்து படைவீரர்கள், வெரோனிகா, எருசலேம் மக்கள், சீமோன், குருக்கள் போன்ற கதாபாத்திரங்களின் ஆடைகள் அணிந்த பங்கு மக்கள். ஊர்வலத்தில் பங்கேற்று தத்ரூபமாக விளக்கினர். இதில் பங்கு தந்தை பாபு சேவியர் தலைமையில், 14 இடங்களில் பிரார்த்தனை செய்தனர். இதில் ஆராதனையுடன், ஏசுவின் பரிகார பாடல்கள் பாடியும், ஜெபமாலை ஏந்தியும் வந்தனர். குன்னூர் செபஸ்தியார் தேவாலயத்தில் திருப்பலி நடந்தது. ஏற்பாடுகளை தேவாலய பங்கு குருக்கள், அறங்காவலர்கள் ஆண்டனி, பென்னி, செயலாளர் ஜோசப், நிர்வாகிகள் வில்பர்ட், சதீஷ், பயஸ், மேத்யூஸ் மற்றும் பங்கு மக்கள் செய்தனர்.