கோவை கோதண்ட ராமசுவாமி கோவிலில் பங்குனி உத்திர மகோத்ஸவம்
ADDED :924 days ago
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமசுவாமி கோவிலில் பங்குனி உத்திர மகோத்ஸவம் நடந்தது. இதில் காலை ஏழு மணி அளவில் ஸ்ரீ சீதாராமருக்கு விசேஷ அபிஷேக ஆராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 11 மணியளவில் ஸ்ரீ சீதாராமருக்கு திருக்கல்யாண மகோத்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீராமபிரானை தரிசனம் செய்தனர்.