கரிவரதராஜ பெருமாள் கோவில் பிரமோத்ஸவ விழா ; திருத்தேரில் சுவாமி உலா
ADDED :727 days ago
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் பிரம்மோத்ஸவ விழாவில், கரி வரதராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பெரியநாயக்கன்பாளையம் கரி வரதராஜ பெருமாள் திருக்கோவில், 19ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா கடந்த, 19ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதுவரை சிம்ம வாகனம், முத்துப்பந்தல், அனுமந்த வாகனம், கருட வாகனம், திருக்கல்யாண உற்சவத்தில் யானை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன் தினம், கரி வரதராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலை சேஷ வாகனத்தில் எழுந்தருளுகிறார். இரவு தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. 28ஆம் தேதி பல்லக்கு சேவை, சந்தன சேவை, தீர்த்தவாரி, சாற்றுமுறை நிகழ்ச்சி நடக்கிறது.