பழநி முருகன் கோயிலில் தங்க ரத புறப்பாடு இன்று மீ்ண்டும் துவக்கம்
ADDED :660 days ago
பழநி; பழநி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நாட்களில் தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி மார்ச் 22 முதல் மார்ச் 26 வரை தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டது. இன்று (மார்ச்.27) முதல் தங்கரத புறப்பாடு வழக்கம்போல் நடைபெற துவங்க உள்ளது. தங்கத்தேர் புறப்பாட்டில் பக்தர்கள் ரூ.2000 செலுத்தி பக்தர்கள் பங்கேற்கலாம். கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கரத புறப்பாடு தினமும் இரவு 7:00 மணிக்கு கோவிலில் தங்க ரதத்தில் சின்னகுமாரசுவாமி புறப்பாட்டை தரிசனம் செய்யலாம்.