கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஜெய ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :895 days ago
கோவை ; கோவை கோட்டைமேடு ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதம் இரண்டாவது புதன்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள மகாலட்சும, நாராயணன், ஜெய ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.