உனக்கும் கீழே உள்ளவர் கோடி...
ADDED :630 days ago
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.
அதற்கு அவர் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். அத்துடன் நீ்ங்களும், ‘கவலை, கடனில் இருந்து உமது பாதுகாப்பு கோருகிறேன். ஆதரவற்ற நிலை, கஞ்சத்தனம், கோழைத்தனம், பிறர் செய்யும் ஆதிக்கம், இவற்றில் இருந்து விடுபட விரும்புகிறேன்’ என தினமும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார் அறிஞர். மேலும் அவர் உனக்கும் கீழே கஷ்டப்படுபவர்கள் கோடி பேர் உள்ளார்கள். எதற்கும் வருத்தம் கொள்ளாதே என்றும் அறிவுறுத்தினார். அதன்படியே அவரும் செய்ய கடன்கள் முழுவதும் அடைபட்டது. கவலைகளும் தீர்ந்தன.
தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள்.