உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகருணை பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா

பெரியகருணை பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா

அவிநாசி; பெரியகருணை பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவிலில் மூன்றாம் ஆண்டு பூச்சாட்டு விழா நடைபெற்றது.

அவிநாசி வட்டம்,வேலாயுதம்பாளையம் கிராமம், பெரிய கருணை பாளையத்தில் எழுந்தருளியுள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் மூன்றாம் ஆண்டு, பூச்சாட்டு விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். முன்னதாக கடந்த 6ம் தேதி பொட்டு சாமி பொங்கல், 7ம் தேதி காப்பு கட்டுதல் கம்பம் நடுதல் ஆகியவற்றுடன் பூச்சாட்டு விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, படைக்கலம் எடுத்தல்,அம்மை அழைத்தல், பூவோடு எடுத்தல்,பொங்கல் வைத்தல்,சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,கம்பம் பிடுங்கி கங்கையில் விடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பூச்சாட்டு விழாவில், நேற்று மஞ்சள் நீராட்டுதழுடன் விழா நிறைவானது. பூச்சாட்டு விழாவையொட்டி, ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !