கோதண்ட ராமசுவாமி கோவிலில் சீதாராம திருக்கல்யாணம் கோலாகலம்
ADDED :543 days ago
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் ராமநவமி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 8ம் தேதி முதல் நடைபெறும் விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக சீதாராம திருக்கல்யாண நிகழ்வு கோவில் மண்டபத்தில் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராமரை தரிசனம் செய்தனர். நாளை ராமநவமி விழா சிறப்பாக நடைபெற உள்ளது.