விருத்தாசலம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :563 days ago
விருத்தாசலம்; விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள ஸ்ரீராம ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ஆஞ்சநேயர் பிறந்த நட்சத்திரமான மூல ந ட்சத்திரத்தையொட்டி , விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள ஸ்ரீராம ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அதையொட்டி, காலை 8:00 மணியளவில் ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பன்னீர், எலுமிச்சை போன்ற திரவிய பொருட்களால் அபிேஷகம் நடந்தது. பின்னர் , வெற்றிலை மாலை, வடை மாலை, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.