மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேக வழிபாடு
ADDED :602 days ago
போத்தனூர்; தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் அஷ்டமி. முன்னிட்டு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது. மதுக்கரை மரப்பாலம் அருகே தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நேற்று அஷ்டமி முன்னிட்டு, நடராஜர், சிவகாமி தாயாருக்கு பால்,தயிர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், வாசனை திரவியங்கள் மற்றும் திருநீர் கொண்டு அபிஷேக வழிபாடு நடந்தது. தொடர்ந்து பூ அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்து சென்றனர்.