குன்னூர் தந்தி மாரியம்மன் கோயிலில் தாலப்பொலி ஊர்வலம்
ADDED :558 days ago
நீலகிரி, குன்னூரில் தந்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கேரள மக்களின் பாரம்பரிய செண்டை, பஞ்ச வாத்தியம் முழங்க, தாலப்பொலி ஊர்வலத்துடன் துவங்கியது.
குன்னூரில் உள்ள பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஒரு மாதத்திற்கு சித்திரை திருவிழா நடக்கும். 140 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவிலின் நடப்பாண்டின் சித்திரை தேர்த்திருவிழா கேரள மக்களின் பாரம்பரிய செண்டை, பஞ்ச வாத்தியம் முழங்க, தாலப்பொலி ஊர்வலத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.