கோவை கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு
ADDED :561 days ago
கோவை ; கோவை கோட்டைமேடு ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை சர்வ ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவிலில் உற்சவர் மூர்த்திக்கு அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் கரிவரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.