ஓசூர் மலை மீது நிறுத்தப்பட்ட 257 ஆண்டு பழமையான தேர்
ADDED :632 days ago
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், மலை மீது மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தேரோட்டத்தில், 1,767 முதல், 257 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்தேர் பழுதடைந்தது. இதையடுத்து ஒரு கோடி ரூபாய் மதிப்பில், 14 அடி உயரம், 28 டன் எடையில் புது தேர் தயாரிக்கப்பட்டது. இதனால் பழைய மரகதாம்பாள் தேர், தேர்ப்பேட்டை வீதியில் நிறுத்தப்பட்டது. இதை மலை மீது எடுத்து சென் று, பக்தர்கள் பார்வைக்கு நிறுத்த கோரிக்கை எழுந்தது. தேர் கமிட்டி தலைவரும், முன்னாள் எம் . எ ல் . ஏ . , வுமானமனோகரன் முன்னிலையில், அ.தி.மு.க., – எம். ஜி.ஆர்., மன்ற இணை செயலர் ஜெயப்பிரகாஷ் ஏற்பாட்டில், கிரேன் உதவியுடன், 15 டன் எடையுள்ள பழைய தேர் லாரியில் ஏற்றப்பட்டு, மலை மீதுள்ள, மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் கோபுரம் முன் நேற்று நிலை நிறுத்தப்பட்டது.