திரவுபதி அம்மன் தீமிதி விழா காஞ்சிபாடியில் கோலாகலம்
ADDED :556 days ago
திருவாலங்காடு,: திருவாலங்காடு ஒன்றியம் காஞ்சிபாடி கிராமத்தில் அமைந்துள்ளது, திரவுபதி அம்மன் கோவில். 200 ஆண்டுகள் பழமையான திருக்கோவிலில், 148ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. கடந்த மாதம் 27ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் கோவில் முழுதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. திரவுபதி அம்மன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அக்னிகுண்டம் எதிரில் எழுந்தருளினார். விரதம் இருந்து காப்பு கட்டிய 148 பக்தர்கள், அக்னி குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.