உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி கோயில்களில் கூட்டு பிரார்த்தனை

மழை வேண்டி கோயில்களில் கூட்டு பிரார்த்தனை

தமிழகத்தில் பருவ மழை பொய்த்து போனதால், தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. நீர்நிலைகள் வறண்டு, குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பல்வேறு சமூக அமைப்பு சார்பில் மழை வேண்டி யாகம், வர்ண ஜெபம், கோயில்களில் சிறப்பு வழிபாடு ஆகியவை நடத்தப்படுகின்றன. அதன்படி, திருப்பூர், புது பஸ் ஸ்டாண்ட் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் ஹிந்து முன்னணி சார்பில் மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது. அதேபோல் இந்து முன்னணி சார்பில் மழை வேண்டி கோவை கோனியம்மன் கோவிலில் பிரார்த்தனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !