செண்டூர் கங்கையம்மன் கோவில் சித்திரை திருவிழா
ADDED :559 days ago
மயிலம்; மயிலம் அடுத்த செண்டூர் கங்கையம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நடந்தது. விழாவின் 3ம் நாளான நேற்று காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 3:00 மணிக்கு கோவில் வளாகத்தில் அம்மனுக்கு படையலிட்டனர். 5:00 மணிக்கு சமய சொற் பொழிவு நடந்தது. இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.