திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி ஜெயந்தி விழா
ADDED :506 days ago
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கனியாக பரமேஸ்வரி ஜெயந்தியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஜெயந்தியை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு கலச ஸ்தாபனம் 8:30 மணிக்கு பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சீர்வரிசை எடுத்தல், 9:00 மணிக்கு ஹோமம், 10:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், மகாதீப ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு விருந்து படைக்கப்பட்டது. தொடர்ந்து பரதநாட்டியம், வாசவி இசைக்கதம்பம் நிகழ்ச்சி, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் மற்றும் ஆரிய வைசிய சமூகத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.