/
கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை. சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன்
முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை. சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன்
ADDED :538 days ago
கோவை; ஆர். எஸ் .புரம் தடாகம் ரோடில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 64-ம் ஆண்டு சித்திரை விழா கடந்த 6ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அடுத்து பூச்சாட்டுதல் ,கம்பம் நடுதல் ஆகியன நடைபெற்றது. இதைத் தொடர்ந்து திருவிளக்கு பூஜை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மூலவர் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.