உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆழ்வார் திருநகரியில் நவதிருப்பதியில் உள்ள 9 பெருமாள்கள் ஒரே இடத்தில் கருட சேவை

ஆழ்வார் திருநகரியில் நவதிருப்பதியில் உள்ள 9 பெருமாள்கள் ஒரே இடத்தில் கருட சேவை

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவில் வைகாசி 5 ம் திருவிழாவை ஒட்டி  9 கருட சேவை நடந்தது. நவதிருப்பதியில் உள்ள பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோயிலில் வைகாசி அவதார திருவிழாவை முன்னிட்டு இன்று ஒரே இடத்தில் 9 கருட சேவை நடந்தது. இதில் இன்று காலை நவ திருப்பதி கோயில்களில் உள்ள கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினிவேந்தன், பெருங்குளம் மாயக்கூத்தன், தொலைவில்லிமங்கலம் செந்தாமரைக்கண்ணன், இரட்டை திருப்பதி தேவபிரான், தென்திருப்பேரை ஸ்ரீநிகரில்முகில்வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநதி ஆகியோர் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்ணபாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !