உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமணத்தில் நகை பிரச்னையா?

திருமணத்தில் நகை பிரச்னையா?

சிதம்பரம் அருகில் அமைந்துள்ளது சிவபுரி. புராணப்பெயர் திருநெல்வாயில். இங்குள்ள இறைவன் உச்சிநாதேஸ்வரர். ஒரு சமயம், திருஞானசம்பந்தர் இவ்வூரின் வழியாக தன்னுடன் வந்த தொண்டர்களுடன் ஆச்சாள்புரம் சென்றார். நல்ல வெயில் அடித்தது. தன் அடியவர்கள் அமுது செய்ய வேண்டும் (சாப்பிடுதல்) என்று எண்ணிய சிவபெருமான், மாறு வேடத்தில் வந்து, உணவு பரிமாறினார். உச்சிவேளையில் உணவருளிய நாதர் என்பதால் உச்சிநாதேஸ்வரர் எனப்பட்டார். நகைப் பிரச்னை காரணமாக திருமணம் தடைபட்டால், இங்குள்ள கனகாம்பிகையிடம் வேண்டுதல் வைக்கலாம். கனகம் என்றால் தங்கம். சிவலிங்கத்தின் பின்புறம் பார்வதி பரமேசுவரர் திருவுருவங்கள் இடம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !