உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நினைத்து நினைத்து நெஞ்சம் உருகுதே!

நினைத்து நினைத்து நெஞ்சம் உருகுதே!

இறைவனை வணங்கும் போது, உள்ளமுருகி, கண்ணீர் பெருகுவதாக திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற தெய்வப் புலவர்களெல்லாம் பாடியுள்ளனர். இறைவனிடம் நம் கோரிக்கையை வைக்கும் போது மனமுருகி பிரார்த்திக்கவேண்டும். நமக்கு ஏதேனும் நோய் வந்தால், அதன் வேதனை தாளாமல், இறைவா! என் வியாதியை குணமாக்கமாட்டாயா? என உருகுவோம். துன்பம் வந்தால் மட்டுமல்ல, நமக்கு ஏதேனும் பொருள் கிடைத்து இன்பப்படும் வேளையில் கூட, இப்படி ஒரு பாக்கியம் தந்தாயே, என கண்ணீர் சிந்தி வணங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !