வெண்ணிற அர்த்தநாரி
ADDED :5115 days ago
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்து உள்ளது. யோக வல்ல சித்தர்களால் உருவாக்கப்பட்ட இவரது திருவுருவம் வெண்ணிறமாக காட்சி தருவது சிறப்பு. அர்த்தநாரீஸ்வரரின் திருவடியில் நீர் ஊற்று உள்ளது. அதன் மத்தியில் ஒரு பேழையில் மரகதலிங்கம் இருக்கிறது. பக்கத்திலுள்ள ஒரு மண்டபத்தின் கற்சுவரில் 9 துவாரங்களுடனான பலகணி உள்ளது. ஆண்டில் 3 நாட்கள் சூரி யனின் கதிர்கள் பலகணி வழியே அர்த்தநாரீஸ்வரர் மீது படும்.