உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரகம் எடுப்பு விழாவில் உடலில் கத்தி போட்டு வந்த பக்தர்கள்

கரகம் எடுப்பு விழாவில் உடலில் கத்தி போட்டு வந்த பக்தர்கள்

எழுமலை; எழுமலை அருகே இ.கோட்டைபட்டியில் ராமலிங்க சவுண்டம்மன் வைகாசிப் பொங்கல் கரகம் எடுப்புத் திருவிழா நடைபெற்றது. கோயிலிலிருந்து பத்தர்கள் ஊர்வலமாக உத்தப்புரம் முருகன் கோயில் சென்று அங்கிருந்து கரகம் எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கரகம் எடுத்து வரும் வழியில் துர்தேவதைகள் அணுகாமல் இருக்க பக்தர்கள் கத்திகளை தங்களின் உடலில் வெட்டியபடி வந்தனர். கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மாலையில் முளைப்பாரி மாவிளக்கு, இன்று பொங்கலிடுதல் தொடர்ந்து நாளை கரகம் கரைத்தல் வழிபாடுகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !