கோமுகவழி என்பது என்ன?
ADDED :5115 days ago
கருவறையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த திரவியங்கள் வழியும் பாதைக்கு கோமுகம் என்று பெயர். இதில் வரும் நீரை நிர்மால்யதீர்த்தம் என்று சொல்வர். இதைத் தலை, கண்களில் வைத்துக் கொள்வர். சிவாலயத்தில் கோமுகத்திற்கு மேலே வடக்கு நோக்கியபடி துர்க்கை சந்நதி இருக்கும். கோ என்றால் பசு. சில கோயில்களில் பசுவின் முகத்தின் வடிவத்திலேயே கோமுகம் அமைப்பது சிறப்பு.