உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் பவுர்ணமி கருட சேவை கோலாகலம்; பக்தர்கள் குவிந்தனர்

திருப்பதியில் பவுர்ணமி கருட சேவை கோலாகலம்; பக்தர்கள் குவிந்தனர்

திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயிலில் இன்று பவுர்ணமி கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்றும் இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கருடசேவை நடைபெறும். இன்று வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு இரவு 7 மணிக்கு கருட வாகன சேவை தொடங்கியது. சர்வாலங்கார அலங்காரத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி, கருடன் வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கருட சேவையில் துணை இஓ லோகநாதம் மற்றும் கோவில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !