மந்த்ராலயத்தில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை தரிசனம்
ADDED :468 days ago
ஆந்திரா; இன்று மந்த்ராலயம் சென்றிருந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ராகவேந்திர சுவாமியை தரிசித்தார். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், மந்த்ராலயத்தில் உள்ளது ராகவேந்திர சுவாமி கோவில். இங்கு இன்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, அண்ணாமலை ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி பிருந்தாவனத்தில் சுவாமியை தரிசித்தார். அவருக்கு ஆசி வழங்கிய ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த ஸ்வாமி, பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.