உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

சூலூர்; கண்ணம்பாளையம் மகாலட்சுமி கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவில், 100 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஆண்டு விழாவை ஒட்டி கடந்த ஒரு வாரமாக சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது. 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்ந்திருக்க, தேங்காய்களை பக்தர்களின் தலையில் பூஜாரி உடைத்தார். அதன் பின் அம்மனுக்கு பூஜைகள் நடந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர்.இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்; தலையில் தேங்காய் உடைத்து வழிபடுவதால், எங்கள் தலையெழுத்து மாறும் என்ற நம்பிக்கையில் இதை செய்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினோம் என்றனர். தலையில் காயமடைந்தவர்களுக்கு, மஞ்சள் பூசப்பட்டது. மாலை மூத்தோர் வழிபாட்டுடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !