உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றி தரும் வெற்றிலை மாலை

வெற்றி தரும் வெற்றிலை மாலை

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். ராமன் வெற்றி பெற்ற செய்தியை அசோகவனத்து சீதைக்குத் தெரிவிக்க புறப்பட்டார் ஆஞ்சநேயர். மகிழ்ச்சிப் பெருக்கில் அவருக்கு பரிசளிக்க விரும்பினாள் சீதை. அவளுக்கு அருகில் வெற்றிலைக் கொடி படர்ந்திருப்பதைக் கண்டாள். அதைப் பறித்து விட்டு, நல்ல செய்தி சொல்ல வந்த உனக்கு இந்த வெற்றிலைமாலையைப் பரிசாக அளிக்கிறேன். ஏற்றுக் கொள்! என்றாள். அன்னையின் கையால் கிடைத்த இந்த மாலையை ஏற்றுக்கொண்டு ஆஞ்சநேயர் மகிழ்ந்தார். இதன் அடிப்படையில் பக்தர்கள், தங்கள் செயல்களில் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்தும் வழக்கம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !