உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரக்கிக்கும் நற்கதி

அரக்கிக்கும் நற்கதி

வராஹமூர்த்தி இரண்யாட்சன் என்னும் அரக்கனை வதம் செய்து விட்டு வைகுண்டம் புறப்பட்டார். அவன் இறந்தபின், அவனுடைய மகளான ஜில்லிகை விஷ்ணுவை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள். அவள் முன் வராஹமூர்த்தியாக விஷ்ணு தோன்றி தரிசனம் அளித்தார்.  அவள் பெருமாளிடம் தன் வயிற்றில் இருக்கும் கருவுக்கு சாகாவரம் தருமாறு பிரார்த்தித்தாள். தேவர்களுக்கு துன்பம் கொடுக்காத வரை அவனுக்கு அழிவில்லை, என்றார் பெருமாள். ஆனால், ஜில்லிகையின் மகன் தண்டகனுக்கு புத்தி மாறவில்லை. தேவர்களைக் துன்புறுத்தியதால் விஷ்ணு கொன்றுவிட்டார். தன் பக்தையான ஜில்லிகைக்கு மோட்சம் கொடுத்தார். கடலூர் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஜில்லிகா நற்கதி பெற்ற ஜில்லிகாவனம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !