எரியோடு சக்திவிநாயகர் கோயில் மீது விழுந்த மரம்
                              ADDED :515 days ago 
                            
                          
                          எரியோடு; எரியோடு பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதில் நால் ரோடு பகுதியில் இருந்த உயரமான ஆதி மரம் சாய்ந்து சக்திவிநாயகர் கோயில் மீது விழுந்தது. இத்துடன் இப்பகுதியில் விவசாய தோட்டத்திற்கு மின்சப்ளை தந்த 3 மின்கம்பங்களும் சேதமடைந்து முறிந்தன. இதையடுத்து சேதமான பகுதிக்குரிய சப்ளையை மட்டும் துண்டித்த மின்வாரிய ஊழியர்கள் இதர குடியிருப்புகளுக்குரிய மின்வினியோகத்தை சீரமைத்து வழங்கினர்.