ஆகாசகங்கை பால ஆஞ்சநேய சுவாமிக்கு மலர்களால் சிறப்பு அபிஷேகம்
ADDED :533 days ago
திருப்பதி; திருமலையில் ஆஞ்சநேய ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக, சுவாமிக்கு மிகவும் பிடித்தமான கனகாம்பரம், சிந்துர வர்ண கன்னேரி மலர்களால் சிறப்பு சஹஸ்ர நாமார்ச்சனை, கோயில் அர்ச்சகர்களால் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வைகானச ஆகமசலஹதாரு ஸ்ரீ மோகனராங்காச்சாரியார் அஞ்சனாத்ரி, ஆகாசகங்கா ஸ்ரீ ஆஞ்சநேயசுவாமி பிறந்த இடம் மற்றும் சுவாமியின் மகிமைகள் குறித்து விளக்கினார். பின்னர் சுவாமிக்கு பஞ்சாமிர்த ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.