விடுமுறை தினம் : ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ADDED :703 days ago
ராமேஸ்வரம்; விடுமுறை நாள் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விடுமுறை நாள் யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான வாகனத்தில் ராமேஸ்வரம் கோயிலுக்கு பக்தர்கள் வந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார்கள். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். இதன்பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் பக்தர்கள் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகையால் ராமேஸ்வரம் திட்டக்குடி தெரு, கோயில் மேலவாசல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.