பொள்ளாச்சி மதுரை வீரன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :10 hours ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, டி.கோட்டாம்பட்டி விஜயபுரம் அறிவொளி நகர் மதுரை வீரன் கோவில் திருவிழா கடந்த, 11ம் தேதி சேத்துமடை தெய்வகுளம் காளியம்மன் கோவில் தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதன்பின், சக்தி கும்பம் கொண்டு வருதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று மதுரை வீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாவிளக்கு கொண்டு வந்து படைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்குதல், சக்தி கும்பம் கங்கையில் விடுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை, 16ம் தேதி அபிேஷக பூஜை, ஆராதனை பூஜைகள் நடக்கிறது.