உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கவரம் குமராத்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

சிங்கவரம் குமராத்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

செஞ்சி: சிங்கவரம் குமராத்தம்மன் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


செஞ்சி அடுத்த சிங்கவரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான குமராத்தம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு 13ம் தேதி காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, எஜமான சங்கல்பம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தியும், மாலை 6 மணிக்கு கும்ப அலங்காரம், பிரவேச பலி, யாகசாலை பூஜை, முதல் கால ஹோமம் ஆகியன நடந்தது. நேற்று காலை 5.30 மணிக்கு வருண பூஜை, தம்பதி பூஜை, துவார பூஜை, 108 திரவிய ஹோமம், விசேஷ வேத பாராயணம், மூல மந்திர ஹோமமும், 8.30 மணிக்கு மகாபூர்ணாஹுதியும், 8.45 யாத்திரா தானம், 9.15 மணிக்கு கடம் புறப்பாடும் 9. 45 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து மூலவர் மகா அபிஷேகம், மகா தீபாராதனையும், இரவு 7 மணிக்கு சாமி வீதி உலாவும் நடந்தது.  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். பூஜைகளை செல்லபிராட்டை ஈஸ்வர சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர். விழா குழுவினர் சிங்கவரம் பொது மக்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !