வெப்பம் தணிந்தது; அயோத்தி ராமருக்கு குளிர்ந்த மலர்களால் சிறப்பு அலங்காரம்
ADDED :583 days ago
அயோத்தி; அயோத்தி ராமருக்கு இன்று குளிர்ந்த மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பகவான் ஸ்ரீ ராம்லாலா சர்க்கார் தரிசனம் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.
புண்ணிய பூமியாக போற்றப்படும் அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் அயோத்தி ராமரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கோடை காலம் துவங்கியது முதல் அதிகரித்து வரும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு, ராமருக்கு பருத்தி வஸ்திரம் அணிவித்து பூஜைகள் நடைபெற்று வந்தது. தற்போது வெப்பம் தணிந்ததால், பிரபு ஸ்ரீ ராம்லல்லா சர்க்காருக்கு குளிர்ந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.