உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தரங்கம்பாடி வெங்கடாஜலபதி கோயிலில் மஹா சம்ப்ரோஷண பெருவிழா

தரங்கம்பாடி வெங்கடாஜலபதி கோயிலில் மஹா சம்ப்ரோஷண பெருவிழா

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி திருக்கோயிலில் மஹா சம்ப்ரோஷண பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காட்டுச்சேரி கிராமத்தில் ஸ்ரீ பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மஹா சம்ப்ரோஷண பெருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு பகவத் அனுக்ஞை மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகளுடன் விழா துவங்கியது. பின்னர் இரண்டு காலை யாகசாலை பூஜைகள் நிறைவுற்று பூர்ணகுதி நடைபெற்றது. பின்னர் மேள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடாகி ஊர்வலமாக ஆலயத்தை சுற்றி வந்து கோபுர கலசத்தை வந்தடைந்தது. பின்னர் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா சம்ப்ரோஷண பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !