காஞ்சி விஜயேந்திரர் இன்று ஓரிக்கை மணிமண்டபத்திற்கு விஜயம்
காஞ்சிபுரம்; காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று திங்கட்கிழமை மாலை, ஓரிக்கையில் உள்ள மஹா பெரியவா மணிமண்டபம் சென்று, அங்கு சந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் கூறியதாவது: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது பீடாதிபதி, சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 2 ஆண்டுகள் வட இந்திய விஜய யாத்திரையை நிறைவு செய்து, கடந்த மார்ச் 20ம் தேதி காஞ்சிபுரம்வருகை தந்தார். அன்று முதல், சங்கர மடத்தில், சந்திரமவுலீஸ்வரர் பூஜையை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று, திங்கட்கிழமை, மாலை 4.30 மணிக்கு சுவாமிகள் சங்கரமடத்தில் இருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள மஹா பெரியவா மணி மண்டபத்திற்கு விஜயம் செய்கிறார். அங்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்வதற்காகவே பிரத்யேகமாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூஜா மண்டபத்தில் தொடர்ந்து சந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்ய உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.