உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் சீரடி குபேர சாய்பாபா கோவில் ஆண்டு விழா

திருக்கோவிலூர் சீரடி குபேர சாய்பாபா கோவில் ஆண்டு விழா

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், தியாகி வடிவேல் நகரில் அமைந்துள்ள சீரடி குபேர சாய்பாபா ஆலயத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.திருக்கோவிலூர் தியாகி வடிவேல் நகரில், புதிதாக கட்டப்பட்ட சீரடி குபேர சாய்பாபா ஆலயத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா இன்று நடந்தது. காலை 8:00 மணிக்கு கோமாதா பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து கலச ஸ்தாபனம், யாகசாலை பூஜைகள், மூலவருக்கு பக்தர்களால் அபிஷேகம், ஆரத்தி பூஜை நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை, மதியம் 1:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆரத்தி பூஜை, வீதி உலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகள் ஆலய நிர்வாகி சுப்பு மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !