கீழப்பட்டு கங்கை மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
ADDED :551 days ago
சங்கராபுரம்; கீழப்பட்டு கங்கை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. சங்கராபுரம் அடுத்த கீழப்பட்டு கங்கை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா மற்றும் தேரோட்டம் நடப்பது வழக்கம். தேர் திருவிழாவையொட்டி நேற்று முன் தினம் ஊரணி பொங்கல் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடந்தது. பின்
அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச்செய்து, ஊர் பொது மக்கள் தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் நடந்தது. தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சங்கராபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.