உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம்

சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம்

அவிநாசி; சேவூர் வாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று பாலாலயம் கோலாகலமாக நடந்தது. நடுச்சிதம்பரம் என்று போற்றப்படும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் செப்.,6ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருப்பணிகள் துவங்கப்பட்டு முழுவீச்சில் நடக்கிறது. விநாயகர், வாலீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, சுப்பிரமண்யர் ஆகிய பிரதான மூலவர்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் நேற்று நடந்தது. முன்னதாக சிறப்பு கணபதி ஹோமம் , அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தன. கூனம்பட்டி ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமை தாங்கினார். கோவில் செயல் அலுவலர் சங்கரசுந்தரேஸ்வரன் முன்னிலை வகித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !