உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கந்தசஷ்டி விழா: மலையேறியது கோயில் யானை கஸ்தூரி!

பழநி கந்தசஷ்டி விழா: மலையேறியது கோயில் யானை கஸ்தூரி!

பழநி: பழநி கந்தசஷ்டி விழாவிற்காக, கோயில் யானை "கஸ்தூரி யானைப்பாதை வழியாக மலைக்கோயில் சென்றது. பழநி மலைக்கோயிலில் நடைபெறும் ஒரே திருவிழா கந்த சஷ்டி மட்டுதான். நேற்று காப்புகட்டுதலுடன் துவங்கிய விழா, நவ.19 ல் திருக்கல்யாணத்துடன் முடிவடையும். ஆண்டு முழுவதும் பெரியநாயகியம்மன் கோயிலில் உள்ள யானை கஸ்தூரி, கந்த சஷ்டி விழாவிற்கு மட்டுமே மலைக்கு செல்லும். நேற்று காலை 7 மணிக்கு, யானைப் பாதை வழியாக மலையேறிய கஸ்தூரி, பத்மாசூரனை சின்னக்குமாரசுவாமி வதம் செய்யும் வரை, மலைக்கோயிலில் தங்கி, பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !