உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடகோவை ஐயப்ப சுவாமி கோவில் பிரதிஷ்டை தினவிழா

வடகோவை ஐயப்ப சுவாமி கோவில் பிரதிஷ்டை தினவிழா

கோவை; மேட்டுப்பாளையம் ரோடு வடகோவை ஐயப்ப சுவாமி கோவில் பிரதிஷ்டை தினவிழா நடந்தது. இதில் முதல் நிகழ்வாக காலை 5 மணி அளவில் கணபதி ஹோமம் நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 7 மணிக்கு உஷ பூஜை,, 8 மணி அளவில் அஷ்டபிஷேகம் மற்றும் பஞ்ச கவ்ய அபிஷேகங்கள் நடந்தன. காலை 9 மணி அளவில் மூலவர் சுவாமி ஐயப்பனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இதில் சுவாமி ஐயப்பன் விளக்கின் ஒளியில் தீபஜோதியாய் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனை சரணகோஷ முழங்கி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !