உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒட்டை வேம்புலி மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா

ஒட்டை வேம்புலி மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா

வானுார்; ஒட்டை வேம்புலி மாரியம்மன் கோவில் செடல் திருவிழா நடந்தது. வானுார் அடுத்த ஒட்டை கிராமத்தில் வேம்புலி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் செடல் உற்சவம் நடந்து வருகிறது. இந்தாண்டு செடல் திருவிழா நேற்று நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அலகு குத்தியும், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !