திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் நாகர்லாந்து கவர்னர் சுவாமி தரிசனம்
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் நேற்று நாகர்லாந்து கவர்னர் கணேசன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனிசன்னதியில் அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் இன்று நாகர்லாந்து கவர்னர் கணேசன் வருகை புரிந்தார்.பின்னர் ஒ.என்.ஜி.சி.,வி.ஐ.பி.,தங்கு அறைக்கு வந்த அவரை துணை ஆட்சியர் ஜான்சன் வரவேற்றார். பின்னர் கவர்னர் கணேசன் திருநள்ளாறு கோவிலுக்கு வருகை புரிந்த இவரை கோவில் நிர்வாகம் சார்பில் அருணகிரிநாதன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் கவர்னர் கணேசன் தர்ப்பாரண்யேஸ்வரர்.விநாயகர், முருகன்,அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் மேற்கொண்டு பின்னர் கவர்னர் கணேசன் சனீஸ்வர பகானுக்கு அபிஷேகத்திற்கு எள்ளில் எடுக்கப்பட்டு சுத்தமான செக்கு நல்லெண்ணெய் வழங்கி சிறப்பு பூஜைசெய்து 9தீலதீபம் ஏற்றி காக்கைக்கு எள்ளுசாதம் வழங்கி பகவானை பக்தி பரவசத்துடன் கவர்னர் கணேசன் சிறப்பு பூஜை செய்தார்.உடன் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான்,பா.ஜ.க.,பிரமுகர் அருள்முருகன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.