திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை
ADDED :786 days ago
திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சௌந்தரநாயகி அம்மன் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்தது. மாலை ஐந்து மணிக்கு திருமுறை விண்ணப்பத்துடன் விழா தொடங்கியது. மாலை ஆறு மணிக்கு நால்வர் சன்னதியில் அபிஷேகம் ஆராதனை நடந்த பின் மாணிக்க வாசகர் திரு வீதி உலா நடந்தது. நான்கு ரத வீதிகளையும் வலம் வந்த பின் சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவேலப்ப தேசிகர் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.