உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை காமாட்சி அம்மன் கோவிலில் திருமஞ்சன விழா

காரமடை காமாட்சி அம்மன் கோவிலில் திருமஞ்சன விழா

மேட்டுப்பாளையம்; காரமடை காந்தி மைதானம் பாவடியில் உள்ள காமாட்சி அம்மன் திருக்கோவிலில் ஆணி திருமஞ்சன விழா நேற்று நடந்தது. காலையில் கால சந்தி பூஜை, விநாயகர் வழிபாடு, வேள்வி கலச பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து கிழக்கு ரத வீதியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் சீர்வரிசை எடுத்து காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். பின், அலங்கரிக்கப்பட்ட மேடையில் ஏகாம்பரேஸ்வரருக்கும் அம்பிகைக்கும் திருக்கல்யாண நிகழ்வு நடந்தது. சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார்கள் நடத்தினர். திருக்கல்யாணம் முடிந்து பக்தர்களுக்கு மாங்கல்ய சரடுகள், மஞ்சள் குங்குமம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மகா அன்னதானமும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டினை காமாட்சியம்மன் மற்றும் கற்பக விநாயகர் திருக்கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !