உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் மஹோத்சவம்

அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் மஹோத்சவம்

கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் நட்சத்திர மஹோத்சவ விழா நடந்தது. இதன் முதல் நிகழ்வாக நேற்று மாலை 4-30மணியளவில் கணபதி பூஜையுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து சுதர்சன ஹோமம் நடைபெற்றது.மாலை 6.30மணி அளவில் பூர்ணாஹதி,திருமஞ்சனம் ஆகியன நடந்தது. இரவு 7-15மணியளவில் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் சக்கரத்தாழ்வார் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு  சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் சக்கரத்தாழ்வார் பக்தர்களுக்கு காட்சியளித்தார் .  இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !