உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

காளஹஸ்தி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம் தொண்டமானப் புரத்தில் வீற்றிருக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான‌ துணைக் கோயிலான  ஸ்ரீ தேவி - பூதேவி சமேத  வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று (17ம் தேதி) புதன்கிழமை ஏகாதசியை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு சுவாமியை தங்க ஆபரணங்களாலும் பல்வேறு வகையான மலர்கள் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் கோயில் வளாகத்தில் மா விளக்கு ஏற்றி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். 


கோவில் அர்ச்சகர் ஜெயசுவாமி  கூறியதாவது; ஏகாதசி நாளில் கலியுக கடவுளான வெங்கடேசப் பெருமானை தரிசித்தால் பாவங்கள் நீங்கி சகல சுபகாரியங்களும் நடக்கும், எனவே ஒவ்வொரு பக்தரும் ஏகாதசி அன்று இந்த ஷேத்திரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ தேவி பூதேவி சமேத வெங்கடேசப் பெருமானை தரிசித்தால் அனைத்தும் நல்லதாக நடக்கும் என்றும் ஏகாதசி அன்று அபய ஹஸ்தத்தை தரிசித்தால் ஒவ்வொரு வீடும் செழிப்பாக இருக்கும் என்று அர்ச்சகர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !