உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி விழா: பக்தர்களுக்காக சுகாதார வசதி!

திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி விழா: பக்தர்களுக்காக சுகாதார வசதி!

திருப்பரங்குன்றம்: கந்த சஷ்டி விழாவையொட்டி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி  கோயிலில், ஆறுமுகம் கொண்ட சண்முகருக்கு தீபாராதனை நடந்தது. கோயிலில்ல் கந்த சஷ்டி விழாவிற்காக, மாநகராட்சி சார்பில், சுகாதார பணிகள் நடக்கின்றன. இவ்விழாவிற்காக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் தங்கி விரதம் இருக்கின்றனர். தினமும் இருவேளை சரவணப் பொய்கையில் நீராடி கிரிவலம் வருகின்றனர். இதையொட்டி, கிரிவல பாதை, பஸ் ஸ்டாண்ட், கோயில் முன்பு குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தெருக்களை சுத்தம் செய்ய தனி சுகாதார பணியாளர்களை மேயர் ராஜன்செல்லப்பா நியமித்துள்ளார். தவிர, இரு நடமாடும் கழிப்பறை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !