உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலூரில் கந்த சஷ்டி விழா துவக்கம்!

கூடலூரில் கந்த சஷ்டி விழா துவக்கம்!

கூடலூர்: கூடலூர் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் கந்தசஷ்டி விழாவின், முதல் நாளான நேற்று காலை பால் அபஷேகம், காப்பு கட்டுதல்  நடந்தது. சுந்தரவேலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டது. இசைக்கு உருகும் முருகன் என்ற தலைப்பில் மதுரை ஜோதிகா ராஜேந்திரன், கம்பன் காட்டும் வாழ்க்கை நெறி பற்றி கவிஞர் பாரதன்.  பாரதத்தில் கண்ணன் என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சேதுமாதவன் ஆகியோர் சமய சொற்பொழிவு ஆற்றுகின்றனர். தினந்தோறும் மகளிர் குழுவினரின் தெய்வீகக்கூட்டு வழிபாடு நடைபெறும். ஐந்தாம் நாள் சூரசம்காரம், ஆறாம் நாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !